பொங்கல் விழாவை முன்னிட்டு கோவையில் தமிழன் திருவிழா

கோவையில் உள்ள நயம் எக்ஸ்பீரியன்ஸ் அமைப்பின் சார்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழன் திருவிழா நிகழ்ச்சி கோவை பீளமேடு பகுதியல் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி அருகில் உள்ள ராதாகிருஷ்ணன் மில் மைதானத்தில் வருகிற ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

கோவை, ஜனவரி 10

கோவையில் உள்ள நயம் எக்ஸ்பீரியன்ஸ் அமைப்பின் சார்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழன் திருவிழா நிகழ்ச்சி கோவை பீளமேடு பகுதியல் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி அருகில் உள்ள ராதாகிருஷ்ணன் மில் மைதானத்தில் வருகிற ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.



இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நாட்டு ஆடு, மாடு, சேவல், குதிரை ஆகியவற்றின் கண்காட்சி நடைபெறுகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சடுகுடு, உரியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், இளவட்டக்கல் தூக்குதல், மல்யுத்தம், கம்பு சுற்றுதல், கயிறு இழுத்தல், கர்லா கட்டைச் சுற்றுதல், கில்லி, கோலி, பம்பரம் சுற்றுதல் ஆகிய போட்டிகளும் நடைபெறுகின்றன.

மேலும், பெண்களுக்கு என 5 கல் விளையாட்டு, நொண்டி, பல்லாங்குழி, பொங்கல் வைத்தல், கோலம் போடுதல், மண்பானை செய்தல், பூ கட்டுதல், அம்மியில் அரைத்தல், உலக்கையில் அரிசி குத்துதல் ஆகிய போட்டிகள் நடைபெறும். ஒரே நேரத்தில் 2,500 பேர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளலாம். 

இதேப்போல் கிராமிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புற நடனம், தவில், வில்லுப்பாட்டு, பரையடித்தல், கும்மி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குழந்தைகளுக்கான சிறு, சிறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. பங்கேற்பாளர்களை மகிழ்விக்கும் வகையில் மாட்டு வண்டி சவாரி, குதிரை வண்டி சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...