கோவை, ஜனவரி 08
தக்காளி, புடல், பாகல், பீர்க்கன் உள்ளிட்ட கீரை வகைகள் உள்ளிட்ட வீட்டுத்தோட்ட விதைக் காய்கறி பாக்கெட்டுகள் கோவை மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்திட கிராம மற்றும் புறநகர் வீட்டுத் தோட்ட காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு சிறப்பு முயற்சியாக வீட்டுத்தோட்ட காய்கறி விதைப் பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம் முதலமைச்சரால் கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது.
அதன்படி, நடப்பாண்டு ரூ. 20 மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் கத்தரி, தக்காளி, புடல், பாகல், பீர்க்கன், கீரை வகைகள், மிளகாய் மற்றும் கொத்தவரை ஆகிய காய்கறிகளில் ஏதேனும் ஐந்து காய்கறி விதைகள் அடங்கிய 22,000 விதைகாய்கறி பாக்கெட்டுகள் கோவை மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் 40 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.20 மதிப்புடைய ஒரு காய்கறி விதி பாக்கெட்டுக்கு அரசு மானியமாக ரூ. 8 வழங்கப்படுகிறது. பயனாளிகள் ரூ. 12 செலுத்தி விதைப்பாக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென நடப்பாண்டில் கோவை மாவட்டத்திற்கு ரூ. 1,760 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஆறு காய்கறி விதைபாக்கெட்டுகள் வரை பெறலாம். இப்பாக்கெட்டுகளை கோவை மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் புறநகர்களில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் பெற்றுப் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.