ஈஷா யோகா மையத்தில் 40 ரஷ்யர்கள் யோகா பயிற்சி

கோவை, ஜனவரி 08

ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெறுவதற்காக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 40 பேர் தமிழகம் வந்துள்ளனர். 



யோகா பயிற்சி கற்கும் ஆர்வம் கொண்டு 40 ரஷ்யர்கள் ஈஷா யோகா மையத்தில் வாரந்தோறும் நடைபெறும் அடிப்படை யோகா வகுப்பான இன்னர் இன்ஜினியரிங் வகுப்பில் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். ஜனவரி 4-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்ற இவ்வகுப்பில் உபயோகா பயிற்சி மற்றும் சாம்பவி மகாமுத்ரா தியானம் ஆகியவற்றை கற்றுக் கொண்டனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் ஈஷா யோகா மையத்தில் ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதி நடைபெற உள்ள சூர்ய க்ரியா பயிற்சி கற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.

இவர்களில் பலர் ஆங்கில மொழி புலமை இல்லாதவர்கள். மேலும் சிலர் இதுவே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள். யோகா கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் இவர்கள் தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்குரு, ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இந்திய தூதரக வளாகத்தில் சத்சங்கம் நிகழ்த்தினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

4 நாள் யோகா வகுப்பில் கலந்து கொண்ட நடாஷா என்பவர் இப்பயிற்சி பற்றி கூறுகையில், " நான் ஒரு மொழி பெயர்ப்பாளராக பணியாற்றுகிறேன்.  நான் உலகின் பல இடங்களுக்குப் பயணித்திருக்கிறேன். பல ஆஷ்ரமங்களுக்கு சென்றுள்ளேன். யோகா பயிற்சிகள் கற்றுள்ளேன். ஆனால், ஈஷாவில் கற்றுக்கொண்ட பயிற்சி கற்றுக்கொள்ள சுலபமாகவும் மிகுந்த பலனளிப்பதாகவும் உள்ளது" என்றார்.

யோகா ஆசிரியர்களில் ஒருவரான யூரிகுஸ்மின் கூறுகையில், ஈஷாவில் ரஷ்ய மொழியில் யோகா நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது என்று அறிவித்தவுடனேயே நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய துவங்கிவிட்டனர். ரஷ்யா, உக்ரைன், கசக்ஸ்தான் மற்றும் உக்ரைனிலிருந்து ரஷ்யமொழி பேசுபவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், பயிற்சிகள் கற்றுக்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர். எனக் கூறினார். 

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...