கோவையில் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 6 வாலிபர்கள் கைது

தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வந்த கோவையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, ஜனவரி 08

தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வந்த கோவையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சையது அகமது. இவரையும், இவரின் வகுப்பு தோழர்களான சர்ஜூன், அபிலாஷ், நிஷாஸ் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய 5 பேரையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்று, ஆள் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் கேட்டு தாக்குதல் நடத்தியது.  அவர்களிடம் பணம் இல்லாததால், செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை பறித்துக்கொண்டு விரட்டிய அந்த கும்பல் தலைமறைவாகியது. 

இது தொடர்பாக, உக்கடம் காவல்நிலையத்தில் சையது அகமது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முஜிபர் ரகுமான், ரியாசுதீன், பங்கடி பரூக், சையது இப்ராகிம், மணிகண்டன் மற்றும்  பவுருதீன் ஆகிய 6 வாலிபர்கள் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியதில் கோவையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. 

இவர்கள் ஆறு பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், ஆட்கடத்தல், பணம் பறிப்பு போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...