கோவை, ஜனவரி 08
ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி தனது 9-வது லீக் ஆட்டத்தில் நெரோகா அணியை நாளை சந்திக்கிறது.
இது தொடர்பாக நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தரராஜன் கூறுகையில், இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி, 2 வெற்றி, 2 சமன், 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளோடு சென்னை அணி உள்ளது. நாளை நடக்கும் மலின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் வீரர்கள் விளையாடுவார்கள். அந்தப் போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில், சூப்பர் 4 லீக் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஸ்லோவேக்கியா வீரரும், சென்னை அணியின் கோல்கீப்பருமான ஒய்ரோஸ் கூறுகையில், கடந்தமுறை நேரு விளையாட்டரங்கில் விளையாடும்போது, சர்வதேச தரத்தில் மைதானம் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது, ஓரளவுக்கு மைதானம் தயார் செய்யப்பட்டு, விளையாடத் தகுதி பெற்றுள்ளது. பல்வேறு மாநிலங்களில் போட்டிகள் நடைபெறுவதால், போக்குவரத்து தூரமும், போட்டிக்கான இடைவெளி நேரமும் இல்லாதது, வீரர்களை சோர்வடையச் செய்கிறது.
ஐரோப்பா கண்டத்தில் விளையாடுவதை ஒப்பிடுகையில், இந்தியாவில் தற்போது கோடையின் தாக்கல் அதிகம் உள்ளதை உணர்கிறேன். என்றார்.
கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, இந்தியாவின் பழமையான, பலம் வாய்ந்த அணியான மோகன் பகன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நாளை நடக்கும் நெரோகா அணிக்கு எதிரான 9-வது லீக் ஆட்டத்திலும், சென்னையின் வெற்றி ஆதிக்கம் தொடரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.