சாட்சிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை தகவல் அனுப்புவதற்கு புதிய சேவை துவக்கம்


கோவை, ஜனவரி 8

நீதிமன்றங்களில் சாட்சி அளிக்கும் நபர்களுக்கு அழைப்பாணை தகவல் அனுப்பும் வகையில் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் குறுஞ்செய்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது தேசிய மின்னாளுமைத் திட்டத்தின் கீழ் "குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலை பின்னல் அமைப்பு" தமிழ்நாடு காவல்துறையில் உள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் சேவையை மேம்படுத்தும் வகையில் http://eservices.tnpolice.gov.in எனும் இணையதளத்தின் மூலமாக இணைய வழி சேவையும் வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம், புகார் பதிவு, முதல் தகவல் அறிக்கை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்யும் வசதி, வாகனங்களின் விபரம் தேடல், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்துபோன நபர்களின் விபரங்கள் பற்றிய தகவல், சாலை வாகன விபத்து தொடர்பான ஆவணங்கள் பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை பதியலாம்.

மேற்கண்ட இணையதள சேவைகளை பொதுமக்கள் நேரடியாக காவல்துறை இணையதளத்திலும் மற்றும் Google Play Store-யில் செயலியை பதிவிறக்கம் செய்தும் பயனடையலாம்.

குறுஞ்செய்தி மூலம் சாட்சிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை:-

தற்பொழுது, சாட்சிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை குறித்த தகவல்களை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை தமிழக முதலமைச்சர் கடந்த ஜனவரி 4ம் தேதியன்று துவக்கி வைத்தார்.

இந்த குறுஞ்செய்தியில் காவல்நிலையத்தின் பெயர், வழக்கு எண், எந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், தேதி மற்றும் நேரம், மேலும் தகவல் அறிய காவல்நிலைய தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் அனுப்பிவைக்கப்படும். குறிப்பாக, சாட்சிகளுக்கு வசதியாக தமிழில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

குறுஞ்செய்தி மூலம் நீதிமன்ற அழைப்பாணை தகவல் அனுப்பும் வசதி இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...