கோவையில் தற்காலிக ஓட்டுனரால் விபத்து: அரசுப்பேருந்து மோதியதில் முதியவர் படுகாயம்

கோவையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய அரசுப் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார்.

ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

90 சதவிகித ஓட்டுனர்கள் வேலைக்கு வராத காரணத்தால் அரசு பேருந்து சேவை முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பும் வரை தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

அதன்படி, கோவை மருதமலை பகுதியை சேர்ந்த இமய பாரதி என்ற தற்காலிக ஓட்டுனர் 76 இலக்கமிட்ட பேருந்தை இயக்கினர்.



காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை நோக்கிச் சென்ற அந்த பேருந்து சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த முதியவர் படுகாயமடைந்தார்.
இது தொடர்பாக வடவள்ளி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல், சென்னையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய பேருந்து மோதி வாலிபர் ஒருவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...