மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க எதிர்ப்பு: கிருஷ்ணசாமியை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்து தேவர் முன்னணியினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை, ஜனவரி 7

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்து தேவர் முன்னணியினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைவர்களின் பெயரை மத்திய, மாநில அரசு வளாகங்களுக்கு சூட்டக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேவர் முன்னணியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து தேவர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் நரசிங்க மூர்த்தி கூறுகையில், 'கிருஷ்ணசாமி சாதி வேற்றுமை உணர்வுகளைத் தூண்டி வருகிறார். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன்னாரின் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது' என்றார்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிருஷ்ணசாமியை எதிர்த்து கோஷங்கள் எழுப்பிய தேவர் முன்னணியினர் அவரது உருவப்படத்தை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...