வெகுவிமர்சையாக நடந்த 26-ம் ஆண்டு ஜெகநாதர் தேர்திருவிழா : ஏராளமானோர் சுவாமி தரிசனம்


கோவை, ஜனவரி 06

கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் 26-வது ஆண்டாக நடைபெற்ற ஜெகநாதர் தேர்த்திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



கோவையில் ஆண்டுதோறும் இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் தேர்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 26-வது ஆண்டாக நடைபெற்ற திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட 42 அடி உயரத் தேரில் ஜெகநாதர், சுப்ரதாதேவி சிலைகளுடன் பலதேவர் சிலைகளும் அமைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவற்றுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.



மேலும், ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்ற முழக்கங்களை எழுப்பியபடி, அவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். பொதுவாக, மக்கள் கோவில்களில் கடவுளை வழிபடச் செல்லும் நிலையில், மக்களைக் காண கடவுள் வருவதாக நம்பிக்கையுடன் இத்தேர் திருவிழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். தேர்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் உற்சாகத்துடன் ஆடிப்பாடிச் சென்ற காட்சிகள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...