பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறுதழுவல், சதிகல் கோவையில் அடையாளம் காணப்பட்டது

கோவை மாவட்ட ம் தொண்டாமுத்தூர் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.



கோவை ஜனவரி 6




கோவை மாவட்ட ம் தொண்டாமுத்தூர் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.



இது குறித்து தமிழரசி கற்பகம், தமிழக மரபு சார் ஆர்வலர்கள் சங்கம் கூறுகையில்:

"கோவையின் பல பகுதிகளில் நாயகர் மற்றும் பல்வேறு அன்டை தேசத்தினர் வாழ்ந்த்தும் , வணிகம் செய்ததற்கான அடையாளம் ஏற்கனவே உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள வீர விளையாட்டை நினைவு கூறும் ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் தற்போது இங்கு காணப்பட்டுள்ளது. இது பல நூறு ஆண்டுகள் பழமையானது. சுமார் 6000 ஆண்டுகள் பழமையானதாகவும் கூட இருக்கலாம்.

பண்டைய காலத்தில் இங்கே ஏறுதழுவல் வீர விளையாட்டாகவும், போர்கள் நடந்தற்கான அடையளமாக சதிகல் உள்ளது. இவைகள் இப்பகுதின் வரலாற்று பதிவுகளை எடுத்துரைக்கிறது .

மக்கள் இதன் அருமை தெரியாமல் சிலைகளை வழிபாடு செய்யும் வகையில் மாற்றியும் பல இடங்களில் சிலைகள் சிதையுண்டும் காணப்படுகிறது எனவே வரும்தலைமுறைக்கு வரலாற்றை பாதுகாக்க உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். ",என தெரிவித்தார்.

காளை அடக்கும் வீரன் சதிகல் என தொல்லியல் எச்சங்கள் அதிகளவு உள்ள கோவையில் தொடர் அகழ்வாராய்ச்சி நடத்தினால் பல வரலாற்று பொக்கிஷம் கிடைக்கும் என்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

இதனை தற்போது அப்பகுதி மக்கள் தெய்வமாக வணங்கி வழிப்பாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...