கோவை, ஜனவரி 05
வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வால்பாறையைலிருந்து சோலையார் அணைக்கு செல்லும் பாதையில் உருளிக்கல் 60 ஏக்கர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆனைமலை தேவி பட்டணம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (வயது 45) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சரவணக்குமார் பெயிண்டிங் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியும் செய்து வருவதாகவும், இவர் உடுமலையில் உள்ள தனியார் பள்ளி சார்பாக வனவிலங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை பெயிண்டிங் பணிக்கு சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த விபத்தில் உயிரிழந்தார்.
சரவணக்குமார் என்பவர் வாகனம் மோதி இறந்திருப்பாரோ என்ற கோணத்தில் முருகாளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.