வரும் 7-ம் தேதி ”சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்” என்ற சிறப்பு கருத்தரங்கம்

கோவை, ஜனவரி 05

சுற்றுச்சூழல், நதிநீர், வனவிலங்கு, பாதுகாப்பு பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி கோவையில் சிறப்பு கருத்தரங்கம் கூட்டமைப்பு சார்பில் நடைபெறுகிறது. 

கோவை மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடந்து வருகிறது. சமீப காலமாக நகரத்திற்குள்ளேயே வனவிலங்குகள் வழிமாறி வந்து கொண்டிருக்கிறன. மத்திய, மாநில அரசுகளின் ஆசியோடு நடைபெறும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறன. 

இதன் ஒருபகுதியாக கோவை வடவள்ளி மருதமலை அடிவாரத்தில் உள்ள பொதிகை மஹாலில் வரும் 7-ம் தேதி (ஞாயிறன்று) சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிநீர் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. 

இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் சுபாஷினி அலி, உ. வாசுகி மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கோவை சதாசிவம், பியூஸ்மனுஸ், ஓசை காளிதாஸ் மற்றும் சமூக இயக்கங்களான மலைவாழ் மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் மாநில தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். காலை 9 மணிக்கு துவங்கும் இக்கருத்தரங்கம் மதியம் வரை நடைபெற உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...