பெண்களுக்காக பெண்களே நடத்தும் ”ஜெயின் மேளா” நாளை தொடக்கம்

கோவை, ஜனவரி 5

கோவையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக, ஜெயின் மேளா என்ற நிகழ்ச்சி நாளை முதல் 2 நாட்களுக்கு நடக்கிறது.

சுபர்ஷ்நாத் பக்தி மண்டல் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி நேரு மைதானத்தில் நடக்கிறது. ஜெயின் சமூகத்தினரின் கோவில்களில் பாடும் பாடல்கள் பாடப்படுகின்றன.



”25-வது ஆண்டாக ”ஜெயின் மேளா” கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஏராளமான சுவாரஸ்மான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. அதேபோல, பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது.” இவ்வாறு கூறினார் மண்டல் குழுவின் உறுப்பினர் லதா பஃப்னா.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் வீடுகளில் தயாரிக்கும் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக இந்த ஜெயின் மேளா நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது.



இந்த நிகழ்ச்சி குறித்து பக்தி மண்டலின் உறுப்பினர் ஹன்ஷா பஃப்னா பேசுகையில், நிறைய பெண்களுக்கு திறமைகள் இருந்தும், அதனை வெளிப்படுத்த முடியாது சூழல் உள்ளது. ஒருவர் சிறப்பாக சமைக்கிறார் என்றால், அவரது திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிதான் இந்த ஜெயின் மேளா என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...