‘நதிகளை மீட்போம்’ இயக்கத்திற்கு தொடரும் ஆதரவு - மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வரை இளைஞர்கள் சைக்கிள் பயணம்

கோவை, ஜனவரி 04

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நதிகளை மீட்போம் இயக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 20 வாலிபர்கள் தமிழகம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.  



யூடிஆர் (UTR) சைக்ளிங் என்று அழைக்கப்படும் இந்தக் குழு மகாராஷ்டிரா மாநிலம் உட்கிர் நகரிலிருந்து இந்த சைக்கிள் பயணத்தை டிசம்பர் 16-ம் தேதி துவங்கினர். சுமார் 1,600 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஜனவரி 1-ம் தேதி ராமேஸ்வரத்தை அடைந்த இக்குழுவினர் இன்று (ஜன.,04) கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை புரிந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் உட்கிர் நகரிலிருந்து திருப்பதி வரை சுமார் 800 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொள்வது இக்குழுவின் வழக்கம். ஆங்கிலப் புத்தாண்டு அன்று திருப்பதியை அடையும் இவர்களது வழக்கமான பயணம் இவ்வாண்டு சற்று வித்தியாசமாக அமைத்தது. நதிகளை மீட்போம் இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்ட இக்குழு இந்த உன்னத நோக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இவ்வருடம் தங்களது சைக்கிள் பயணத்தை உட்கிர் மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை நிகழ்த்தினர். 

தங்களது வழக்கமான பயணதூரத்தை விட இருமடங்கு அதிகதூரமாக சுமார் 1,600 கி.மீ. தூரத்தை 16 நாட்களில் கடந்து ராமேஸ்வரத்தை அடைந்தனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்த இவர்கள், புதுச்சேரியை அடைந்த போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை இக்குழுவை சந்தித்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குழுவை நதிகளை மீட்போம் இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொரு ஊரிலும் சிறப்பாக வரவேற்றனர் என்றும், தமிழகம் மற்றும் புதுவை தன்னார்வலர்கள் தங்கள் வருகையைச் சிறப்பாக விழாக்கோலத்துடன் கொண்டாடினர் என்று குழுவினர் குறிப்பிட்டனர். மேலும், தமிழகத்தின் சிறுஊர்கள் மற்றும் கிராமங்களில் இருந்தும் மக்கள் தங்களை உற்சாகமாக வரவேற்றது நெகிழ்வாக உள்ளதாகக் கூறிய குழுவினர், நதிகளை மீட்போம் இயக்கத்தின் ஒருபகுதியாக தங்கள் ஊரில் தற்போது 300 மரக்கன்றுகள் நட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...