உடுமலை அமராவதி அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த பாசன வசதி மூலம், 25,250 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், ஜனவரி 03:
உடுமலை அமராவதி அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த பாசன வசதி மூலம், 25,250 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பரப்பில் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில் அணையின் நீர் இருப்பு அடிப்படையில் இரு பாசன பகுதிகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் அணையின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது.
இதனையடுத்து, கரூருக்கு உட்பட பாசன பகுதியில் போதிய அளவு மழை பெய்யாத காரணத்தால் அணையில் நீர்இருப்பு செய்யப்பட்டு தற்சமயம் 90 அடிக்கு 59.71 அடியாக உள்ளது. இதிலிருந்து கரும்பு, நெல் பயிர்களுக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் முதலமைச்சரின் உத்தரவுப்படி இன்று காலை எட்டு மணிக்கு பிரதான கால்வாயில் இருந்து வினாடிக்கு 440 கன அடி தண்ணீர் புதிய பாசன பகுதிகளுக்கு திறக்கப்பட்டது.
தண்ணீர் திறந்து வைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு பிரதான கால்வாயில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்றனர்.
மேலும், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், பழைய ஆயக்கட்டு பாசன பகுதி விவசாயிகள் தண்ணீர் தற்சமயம் வேண்டாம் என கூறியதால் இன்று புதிய ஆயக்கட்டு பாசன பரப்பிற்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தண்ணீர் கேட்கும் போது வழங்கப்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.