அரசியலில் களம்புகும் ரஜினியை யாரும் இயக்கவில்லை' - ஜி.கே. வாசன்

நடிகர் ரஜினியை யாரோ இயக்குவது என்பது தவறான கருத்து, அவருடைய திரைப்படங்களில் இயக்குநர்கள் மட்டுமே அவரை இயக்க முடியுமே தவிர அரசியலில் யாரும் அவரை இயக்க முடியாது என்று திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூர், ஜனவரி 03:

நடிகர் ரஜினியை யாரோ இயக்குவது என்பது தவறான கருத்து, அவருடைய திரைப்படங்களில் இயக்குநர்கள் மட்டுமே அவரை இயக்க முடியுமே தவிர அரசியலில் யாரும் அவரை இயக்க முடியாது என்று திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகரில் த.மா.க.,வின் மாணவரணி செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 2017 டிசம்பர் 31-ஆம் தேதியன்று கோவை மாவட்டம் சூலூர் காவல் சரகத்திற்குட்பட்ட தெண்ணம்பாளையம் அருகே சாலை விபத்தில் பலியாயினர். அவர்களது இல்லத்திற்கு இன்று சென்ற ஜி.கே.வாசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் பேட்டியளிக்கையில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு புதியவர் அல்ல. 30 வருடங்களாக நேரிடையாகவும், மறைமுகமாகவும் அரசியலை கவனித்து வருகிறார். அரசியல் ஆழம் தெரிந்தவர். பல தலைவர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரைச் சந்தித்து ஆலோசனை செய்ததுண்டு.

ரஜினியின் முழுநேர அரசியலுக்காக பொறுத்திருக்கிறோம். அவரின் கொள்கை, கோட்பாடுகளை பொறுத்து த.மா.க கூட்டணி முடிவு செய்யும்" என்றார்.

மேலும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பின் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதனை முறைப்படுத்தப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பிரிக்கப்படும் போது ஆய்வு, ஆலோசனை, மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...