வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

வால்பாறை அருகே சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டது.


வால்பாறை, ஜனவரி 3

வால்பாறை அருகே சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டது.

வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மண் கடத்தப்பட்டு அப்பகுதியில் கட்டிட வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், முறைகேடாக விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் புகார் வந்ததையடுத்து வட்டாட்சியர் சு.குணசேகரன் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, நல்லகாத்து சுங்கம் பகுதியில் வாகனத்தில் முறைகேடாக ஆற்று மணல் அள்ளப்படுவது கண்டறியப்பட்டது.



இதனிடையே, அதிகாரிகளைக் கண்ட மணல் கொள்ளையர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் மேற்படி மணல் ஏற்றிக்கொண்டிருந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வால்பாறைக்கு உட்பட்ட சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "வால்பாறை நகராட்சி ஒப்பந்தப்படி கட்டுமாகப் பணிகளுக்கு கரூர் மணல் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஆற்று மணலைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டிடம் உறுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் குறைகிறது. இந்த சட்டவிரோத செயல்களுக்கு சில அரசியல் பிரமுகர்களும் உடந்தையாக உள்ளனர்.



தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...