நீரா பான உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள கடுமையான விதிகளைத் தளர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை, ஜனவரி 02

நீரா பான உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள கடுமையான விதிகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர்,  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்க சட்ட அனுமதியும், அதற்குரிய அரசு ஆணையையும் தமிழக அரசு கடந்த இருபது நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் சூலூர் அருகே ”கோவை நீரா” என்ற பெயரில் பானம் தயாரித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு, வேளாண்துறை இணை இயக்குநர் தலைமையில் கொண்ட குழுவினர் முறையாக அனுமதி பெற்று, விற்பனை நடத்த ஆலோசனை வழங்கியதோடு அரசு ஆணையையும் கொடுத்துள்ளனர்.

இதனிடையே, அரசு ஆணையில் ரூ. 3 கோடி முதல் ரூ. 12 கோடி வரை நீரா பானம் தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளால் விவசாயிகள் நீரா பானத்தை உற்பத்தி செய்ய முடியாத சூழல் உருவாகும். எனவே, அரசு தென்னை மரங்களைக் கணக்கெடுத்து, அதற்கு உண்டான தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும், தங்களுக்கு நீரா பானம் இறக்குவது, விற்பனை சம்பந்தமான விதிகள் உரிமம் பெறும் முறைகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கவும், நீரா உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தேவையான முதலீட்டுத் தொகையையும் அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...