விவசாய நிலங்கள் வழியாகக் கொண்டு செல்லப்படும் மின்கோபுரங்கள் : கேபிள் லைன் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல விவசாயிகள் வலியுறுத்தல்

கொங்கு மண்டல விவசாய பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்லப் பதிக்கப்படும் மின் கோபுரங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுப்பாதை அல்லது கேபிள் லைன் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை, ஜனவரி 02

கொங்கு மண்டல விவசாய பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்லப் பதிக்கப்படும் மின் கோபுரங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுப்பாதை அல்லது கேபிள் லைன் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

தமிழகத்தின் கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நகர்ப்புறங்களில் விவசாயம் மறைந்து பல்வேறு தொழில்கள் பெருகி வந்தாலும், கிராமப்புறங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கம்பு, சோளம், ராகி, கரும்பு, திராட்சை, தென்னை, காய்கறி வகைகள் ஆகியவை அதிகளவில் விவசாயம் செய்யப்படுகின்றன.

கொங்கு மண்டல விவசாயிகளுக்குக் கடந்த 2 வருடங்களாக தண்ணீர், மின்சாரம், மத்திய அரசின் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்ல விவசாய நிலங்களில் குழாய் பதித்தல் மற்றும் உரம், விதை விலை உயர்வு வேலை ஆட்கள் கிடைப்பதில் சிரமம் போன்ற பல பிரச்சனைகள் நிலவுகின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் பல கஷ்டங்களைக் கடந்து விவசாயம் செய்து வந்தனர்.

இதுபோன்ற பிரச்சனைகளை ஓரளவு சமாளித்து இனி வரும் காலங்களிலாவது விவசாயம் நிம்மதியாக செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்த கொங்கு மண்டல விவசாயிகளுக்கு தற்போது ஒரு புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அது, விவசாய நிலங்கள் வழியாக மின்கோபுரம் கொண்டு செல்லும் திட்டமாகும். 

 

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கருமத்தாம்பட்டி பேரூராட்சி, சென்னியாண்டவர் கோவில் அருகில் பவர்கிர்ட் அரசூர் துணை மின்நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்துக்கு தற்போது புதிதாக மின்பகிர்வு பாதையை ஏற்படுத்த அப்பகுதி விவசாய நிலங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

"இந்த மின்நிலையத்திற்கு உடுமலையில் இருந்து வரும் மின்பாதையில் அமைந்துள்ள மின்கோபுரங்களால் சிறு, குரு உழவர்களின் விளைநிலம் துண்டாடப்பட்டு, தென்னை தோப்புகள், மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன, இதனால், உழவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. மீண்டும் இதே மின்நிலையத்திற்கு கரூரில் (புகழூர்) இருந்து புதிய மின்பகிர்வு பாதையை ஏற்படுத்த ஆய்வு செய்கிறார்கள், இதில் பவர்கிர்ட் அரசூர் துணை மின்நிலையத்தில் இருந்து பழைய பாதைக்கு அருகிலேயே அமைப்பதால் முதலில் பாதிக்கப்பட்ட உழவர்கள் மீண்டும் பாதிக்கப்படுகிறார்கள்," என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். 

இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியின் செயல் தலைவர் என்எஸ்பி. வெற்றி கூறுகையில், "இது போன்ற திட்டங்களை மறுஆய்வு செய்து அரசு புறம்போக்கு வழியில் அல்லது நொய்யல் ஆற்றின் கரையோரம் செயல்படுத்த வேண்டும். 

இது சம்பந்தமாக கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு நாளில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி மற்றும் பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது." என்றார்.

இது குறித்து இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் வேலுச்சாமி கூறுகையில் “ இப்பகுதியில் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். விவசாயம் செய்ய வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கிதான் விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மழை பொய்த்து விடும் காரணங்களால் பயிர்கள் கருகி நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற நஷ்டங்களை அடுத்த அறுவடையில் சரிகட்டி விடலாம். ஆனால், விவசாய நிலங்களில் குழாய் பதித்தல், மின்கோபுரங்கள் போன்றவை நிறுவப்படும் போது விவசாயிகள் நிலங்களை இழந்து தவிக்கின்றோம். அதற்கான உரிய இழப்பீடும் தரப்படுவதில்லை. இதுபோன்ற திட்டங்களை விவசாயிகளுக்குப் பாதிக்காதவாறு அரசாங்கம் செயல்படுத்த வேண்டும்” என்றார். 

.

இந்த மின்திட்டத்தால் கொங்கு மண்டலத்தில் உள்ள விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைவதாகவும், விவசாயிகளிடம் எந்தவித முன்னறிவிப்போ, அனுமதியோ இல்லாமல் மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் சில தனியார் நிறுவனங்களின் ஆட்கள் அத்துமீறி விவசாய நிலங்களில் டவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து விவசாயி செந்தில்குமார் கூறுகையில் “ ஒரு டவர் லைன் அமைப்பதால் எங்களின் விவசாய நிலம் சுமார் 3.5 ஏக்கர் பாதிக்கப்படுகிறது. அதற்கு அரசு இழப்பீடு வழங்கத் தயாராக இருந்தாலும், எங்களுக்கு அது வேண்டாம், விவசாயமே தேவை எனப் போராடி வருகிறேன் “ என்றார். 

இது குறித்து மின்வாரியத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்” சில திட்டங்கள் விவசாய நிலங்கள் வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அது தவிர்க்க முடியாதது. அதற்கு உரிய இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஆனாலும் வழங்கிவிடுவோம். விவசாயிகளுக்கும் இது போன்ற திட்டங்களால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாது “ என்றார். 

மின் தட்டுப்பாட்டைப் போக்கக்கூடிய அளவில் அமையக்கூடிய இந்தத் திட்டத்தை எதிர்ப்பதல்ல எங்கள் நோக்கம் என்று கூறும் விவசாயிகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் நம் நாட்டிலேயே பெரிய நகரங்களான தில்லி, மும்பை, சென்னை போன்ற பகுதிகளிலும் உள்ளது போல் கேபிள்லைன் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த முறையினை இங்கு பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...