105 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

ஜனவரி 2

சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த 105 மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த 105 மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், தற்போது பணியாணை பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்தினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...