கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, டிசம்பர் 31
கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் தொடங்கி, வரதராஜபுரம் வரையில் உள்ள காமராஜர் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த மூன்று தினங்களுக்கு முன் துவங்கியது.
தினமும் இரவு நேரங்களில் மட்டும் அப்பகுதியில் பணிகள் நடைபெறுகின்றன.
அவ்வாறு, சிங்கநல்லூர் பேருந்து நிலையம் முன்பு தோண்டப்பட்ட குழி மண் கொண்டு மூடப்பட்டது. குழி தோண்டும்போது குடி நீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக குழியின் மேல்புறம் தண்ணீர் தேங்கியது. இதில், குழியின் மீது போடப்பட்ட மண் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது.

இதையறியாமல், இன்று காலை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஒரு பேருந்தும், மினி லாரி ஒன்றும் மண் மேட்டின் மீது ஏறியது. வாகனங்களின் பாரம் தாங்காமல் மண் தரைக்குள் இறங்கியதில் இரண்டு வாகனங்களும் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட குழியின் இறங்கின.

இந்த விபத்தில் அதிஷ்ட வசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வாகனங்களை மீட்டனர்.
இந்த சம்பவத்தால் சிங்காநல்லூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.