அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகங்கள் : கோவை மாவட்ட கண்காணிப்பாளர்

மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் Pa. மூர்த்தி செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

கோவை, டிசம்பர் 31

மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட அனைத்து காவல்  நிலையங்களிலும் நூலகங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் Pa. மூர்த்தி செய்தியாளர்களிடம்  இன்று கூறினார்.

அவர் கூறுகையில் 'கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 33 காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. 

இந்த காவல் நிலையங்கள் அனைத்திலும் நூலகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள வரவேற்பு அறைகளிலும் நூலகங்கள் உருவாக்கப்பட உள்ளன. 

வரும் பொங்கல் தினத்தில் இருந்து செயல்பட இருக்கும் இந்த நூலகத்தில் போலீசார் மட்டுமல்லாது பொதுமக்களும் புத்தகங்களை எடுத்து படிக்கலாம். 

காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக  நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன' என்றார்.

புத்தாண்டை முன்னிட்டு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர். .Pa. மூர்த்தி.

நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது.  இதனையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று காலை செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துக்கள் மற்றும் குற்றசம்பவங்களின் எண்ணிக்கைகள் ஒப்பீடு செய்யப்பட்ட செய்திக்குறிப்புகள் வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து,  செய்தியாளர் சந்திப்பின் முடிவில் தான் எழுதிய 'பெண்மை வாழ்க' என்ற புத்தகத்தையும், தான் படித்த சில புத்தகங்களையும் செய்தியாளர்களிடம் வழங்கியதோடு, புத்தக வாசிப்பு திறனை வளர்த்துக்கொள்ள கூறி புத்தாண்டு தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...