மாநகராட்சி சார்பில் தூய்மை தூதர்கள் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா

கோவை, டிசம்பர் 30

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில் தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் ஸ்வச் சர்வெக்ஷான் 2018-ன் ஒருபகுதியாக தூய்மை தூதர்கள் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா கோவை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

கோவையில் தனியார் ஹோட்டலில் இந்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் 4,041 உள்ளாட்சி அமைப்புகள் கலந்து கொள்கிறது. இதில், கோவை மாநகராட்சியும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பில் பங்கேற்க உள்ளது.

அதில், ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் மருத்துவமனைகள், உணவகங்கள், காய்கறி மொத்த விற்பனையகங்களுக்கான தூய்மை கணக்கெடுப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. அக்கணக்கெடுப்பில் முழுமையாகத் தூய்மை பணியாற்றி சிறப்பான தரவரிசைப்பட்டியல் பெற்ற தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் காய்கறி மொத்த விற்பனையகங்களின் நிர்வாகிகள் மற்றும் கோவை மாநகராட்சியில் சிறப்பாக தூய்மை பணியாற்றிய மாநகராட்சி லாரி ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஸ்வச் லோகோ மற்றும் ஸ்வச் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, கோவை மாநகராட்சி தூய்மை தூதர்கள் திரைப்பட நடிகர் கே.பாக்கியராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் சரவணன், தன்னார் அமைப்பினர் மற்றும் கோவை முன்னணி தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...