கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

கோவை மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, டிசம்பர் 30

கோவை மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி என்பவர் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையில் கடந்த 26 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனஅழுத்தம் காரணமாக இன்று அதிகாலை 4 மணி அளவில், இவர் சிறையில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை சார்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவரது உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கோவை மத்திய சிறையில் கைதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...