கோவை, டிசம்பர் 30
கோவையில் கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்எல்ஏ வெ.போ. சிவசுப்ரமணியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வெ.போ. சிவசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், உதகையில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கோவை வந்தார். அப்போது, கங்கா மருத்துவமனைக்குச் சென்று, எம்எல்ஏ வெ.போ. சிவசுப்ரமணியத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அவருடன் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்பி. வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.