தேர்தல் பணியாற்ற தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை : திமுக கூட்டத்தில் தீர்மானம்

டிசம்பர் 29

ஆர்.கே நகரில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாகத் தேர்தல் பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஆர்.கே நகர் தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக திமுகவின் உயர்நிலைக்குழு இன்று மாலை கூடியது. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் அன்பழகன், துரை முருகன், கனிமொழி, ராசா உள்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படும் நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல, தேர்தல் பணியாற்ற தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பான்மையை இழந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான அதிமுக அரசு ஜனநாயகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், அதை நீக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...