குப்பை தொட்டிகள் இல்லாத வார்டாக மாற்றுவது குறித்து 22-வது வார்டில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை மாநகராட்சி 22-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சூன்யா – பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்தார்.

கோவை, டிசம்பர் 29

கோவை மாநகராட்சி 22-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சூன்யா – பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்தார். அவர், வீடுவீடாக சென்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

ஐரோப்பிய யூனியன் உதவியுடன் கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் 23-வது வார்டில் சூன்யா திட்டம் 3 வருடங்களுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கண்ட வார்டில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தரம் பிரித்து பெறப்பட்டு, சாலைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் உள்ள குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு, குப்பை தொட்டிகள் இல்லாத வார்டாக மாற்றப்பட்டுள்ளது.



சுவிட்சர்லாந்து தூதரக அமைப்பு, கோவை மாநகராட்சியில் கெபாசிடீஸ் திட்டத்தின் கீழ் ஐசிஎல்இஐ (ICLEI) உடன் இணைந்து சூன்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தற்பொழுது 22 மற்றும் 24-வது வார்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தினமும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் கொடுப்பது பற்றி விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த விழிப்புணர்வு திட்டம் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செயல்படுத்தப்படும். தரம் பிரித்து சேகரிக்கும் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இந்த வார்டுகளில் உள்ள குப்பை தொட்டிகள் படிப்படியாக அகற்றப்பட்டு, குப்பைத் தொட்டிகள் இல்லாத வார்டுகளாக மாற்றப்படும். 

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, செயற்பொறியாளர்கள் லட்சுமணன், சரவணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...