அதிகாரம் உள்ளவர்களின் காலில் விழ வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி அதிரடி உத்தரவு

அதிகாரம் உள்ளவர்களில் காலில் விழ வேண்டாம் என்றும், தந்தை, தாய் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதம் தேவைப்படும் என்பதால் அவர்களின் கால்களில் விழலாம் என ரசிகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

டிசம்பர் 28

அதிகாரம் உள்ளவர்களில் காலில் விழ வேண்டாம் என்றும், தந்தை, தாய் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதம் தேவைப்படும் என்பதால் அவர்களின் கால்களில் விழலாம் என ரசிகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 3வது நாளாக சேலம், நாமக்கல், விருதுநகர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனது ரசிகர்களுடன் நடிகர் ரஜினி இன்று சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

அப்போது ரசிகர்களிடம் ரஜினி பேசுகையில், மதுரை என்றாலே வீரத்தின் அடையாளம். அங்கிருந்து வந்துள்ள உங்களையெல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டிக் கறி சோறு போட ஆசை. ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் முழுக்க சைவம். வேறு இடத்தில் ஒருமுறை அதைப் பார்ப்போம். உங்களின் உற்சாகம் உணர்ச்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் வயதைத் தாண்டி வந்தவன்தான் நானும். சலிப்பு இல்லாமல், காத்திருந்து என்னைச் சந்திக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் பெங்களூருவில் இருக்கும் போது ராஜ்குமாரின் ரசிகன். கடவுள், தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும். உயிர் கொடுத்தவர் கடவுள். உடல் கொடுத்தவர்கள் தாய்-தந்தை. அதற்கு பிறகு பெரியவர்கள் காலில் விழ வேண்டும். வயதான பெரியவர்கள் காலில் விழுவது ஏன் என்றால், இந்தக் கஷ்டமான வாழ்க்கையை நடந்து கடந்து வந்தவர்கள் அவர்கள். அந்த பாதைகளில் நாமும் நடக்கப்போகிறோம் என்பதால், அவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறலாம். ஆனால், மற்றபடி, பணம், பதவி, புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ வேண்டிய அவசியமில்லை, விழாதீர்கள் என்று ரஜினி தனது ரசிகர்களிடையே பேசுகையில் கேட்டுக்கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...