கோவை, டிசம்பர் 27
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாலும், நோட்டாவை விட பாஜகவினால் அதிக வாக்குகள் பெற முடியாது என தமாக இளைஞரணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாலும், நோட்டாவை விட பாஜகவினால் அதிக வாக்குகள் பெற முடியாது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். ஒகி புயல் தொடர்பாக ஆய்வு செய்யும் மத்திய குழு அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்கப் பரிந்துரைக்க வேண்டும்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு என்பது பணத்தினால் பெறப்பட்ட வெற்றி. திமுக கூட்டணி கட்சிகளில் தொண்டர்கள் இல்லாமல் தலைவர்கள் மட்டுமே இருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் நல்ல அரசியல் தலைவர்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.