முன்அனுமதி இல்லாமல் கண்காட்சிகளை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை

கோவை, டிசம்பர் 27

அனுமதி பெறாமல் பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொருட்காட்சி நடத்த இடம் வழங்கும் திருமண மண்டபங்கள், திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் தனியார் பொருட்காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டுமாயின், தனியார் நிறுவனத்தின் பொருட்காட்சிகள் நடத்தப்படும் இடத்திற்கான அனுமதி கடிதம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று, மூன்றாண்டுகளுக்கு வருமானவரி செலுத்தியற்கான வருமான வரிச்சான்று மற்றும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை பொருட்காட்சி நடத்தப்படும் நாட்களுக்குக் கணக்கிட்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலையாக செலுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் தனியார் நிறுவனம் வாயிலாக வழங்கப்படுதல் வேண்டும்.

ஆனால், ஒரு சில தனியார் நிறுவனங்கள் தடையின்மைச் சான்றிதழ்கள் பெறாமல், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் உதவியுடன் உரியத் தடையின்மை சான்றிதழ்கள் பெறப்படாமலும்,  முதலமைச்சர்; பொதுநிவாரண நிதியினை அரசுக்கு செலுத்தப்படாமலும் பொருட்காட்சிகள் நடத்தப்படுவதாக அறிய வருகின்றது. அவ்வாறு நடத்தப்படுவதாகக் கண்டறியப்படும் பட்சத்தில் அத்தனியார் நிறுவனத்தின் மீதும், திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொருட்காட்சி நடத்திட இடம் வழங்கும் சம்மந்தப்பட்ட திருமண மண்டபங்களின் உரிமை ரத்து செய்யப்படும்.

இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்கள் வாயிலாக 7 நாட்களுக்கு குறைவாக நடத்தப்படும் பொருட்காட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக அனுமதி ஆணை வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம், அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், கோவை மாவட்டத்தில் தனியார் பொருட்காட்சி நடத்தவுள்ள தனியார் நிறுவனங்களது விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்படி அரசுக்கு அனுப்பிவைத்து, செய்தித்துறையின் இயக்குநரின் ஆணைவரப்பெற்ற பின்னர் பொருட்காட்சி நடத்திக்கொள்ள அவ்வரசாணையின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சி நடத்திடும் தனியார் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பத்துடன் உரிய தடையின்மைச் சான்றிதழ்கள், மூன்றாண்டுகளுக்கு வருமானவரி செலுத்தியதற்கான வருமானவரி சான்றிதழ்கள் மற்றும் (சென்னையில் செலுத்தத்தக்க வகையில்) முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வங்கிவரைவோலை ஆகியவற்றினை பொருட்காட்சி, கண்காட்சி நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் பெயரில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். 

மேலும், பொருட்காட்சி, கண்காட்சி நடத்திட தடையின்மைச் சான்றிதழ்கள் வழங்கும் காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையின் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் காலம் தாழ்த்தாமல்; தடையின்மை சான்றிதழ்கள் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள். 15 நாட்களுக்கு குறைவாக சமர்ப்பிக்கப்படும் தனியார் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

அதேபோல, அனுமதி வழங்கப்படும் திருமண மண்டபங்கள், திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள், பொருட்காட்சி நடத்தவுள்ள தனியார் நிறுவனங்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறைகளிடமிருந்து தடையின்மை சான்றிதழ்கள் மற்றும் அரசிடமிருந்து அனுமதிக் கடிதம் பெறப்பட்டுள்ளதா என பரிசோதித்த பின்னரே பொருட்காட்சி நடத்திட அனுமதித்தல் வேண்டும்.

அரசிடமிருந்து அனுமதி பெறாமல் பொருட்காட்சி, கண்காட்சி நடத்தப்பட்டால் பொருட்காட்சி நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொருட்காட்சி நடத்திட அனுமதி வழங்கும் திருமண மண்டபங்கள் மற்றும் திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...