அணி தாவ இருக்கும் எம்எல்ஏக்களை அச்சுறுத்தவே, கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் : தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

கோவை, டிசம்பர் 25

டிடிவி தினகரன் அணிக்கு வர நினைக்கும் எம்எல்ஏக்களை அச்சுறுத்துவதற்காகவே, தினகரன் ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார். 

கட்சியின் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், தினகரன் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், பாப்புலர் முத்தையா, புகழேந்தி (கர்நாடக மாநில செயலாளர்), நாஞ்சில் சம்பத், சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இது தொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கோவை சவுரிபாளையம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், சசிகலா படத்தை எடுத்ததில் இருந்தே அதிமுக அலுவலகம் செல்வதே இல்லை. இன்று கட்சியில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்கி இருக்கின்றனர். எங்களை கட்சியில் இருந்து நீக்கினால் மற்றவர்கள் பயந்து கொண்டு தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பன்னீர் செல்வம் போன்றோர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் நட்பு பாராட்டி வருவதை போலவே, 2ஜி வழக்கில் திமுக வெற்றிக்கு தினகரன் வாழ்த்து கூறினார். ஆனால், தினகரன் திமுகவுடன் இணைந்து செயல்படுவதாக பேசிவருகின்றனர். அதிமுக கட்சியை நடத்தத் தகுதியானவர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கிடையாது. சசிகலா மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் ஆகியோரால் மட்டுமே இந்தக் கட்சியை வழிநடத்த முடியும். 

டிடிவி தினகரன் மாயமான் அல்ல கவரிமான். ஆர்.கே. நகரில் தினகரன் தோற்று போயிருந்தால் திமுக வெற்றி பெற்று இருக்கும். பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா போன்றவர்களின் காலில் டிடிவி தினகரன் விழவில்லை. அதிமுகவினர் அனைவரும் டிடிவி தினகரன் பின்னால் அணிவகுக்க வேண்டும். உற்சாகத்துடன் இருந்த அதிமுக அலுவலகம் தற்போது எழவுவீடு மாதிரி ஆகிவிட்டது. கட்சியில் இருந்து தங்களை நீக்கியதைப் பற்றி கவலையில்லை. இவர்களுடன் இருப்பதுதான் கேவலமானது. 

ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கொடுத்த புகழேந்தியை துரோகிகள் கட்சியில் இருந்து நீக்கி இருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தினகரன் பின்னால் அணி திரள வேண்டும். ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கப்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோற்றதற்கு காரணமே அமைச்சர் ஜெயக்குமார்தான். திமுகவை எதிர்க்க தகுதியான நபர் டிடிவி தினகரன் மட்டுமே. 

கர்நாடக மாநிலச் செயலாளராக முறைப்படி ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டவன் நான். என்னை யாராலும் நீக்க முடியாது. சிறையில் இருந்த சசிகலா நேற்றுதான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். பாஜகவினரும், பிரதமர் மோடியும் நேற்றைய தேர்தல் வெற்றியின் மூலம் உண்மையை தெரிந்து கொண்டு இருப்பார்கள். இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...