ஆர்.கே. நகரில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தினகரன் !

டிசம்பர் 24

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் 8835 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

சென்னை ஆர்.கே. நகரின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புக்கு இடையே ராணி மேரி கல்லூரியில் இன்று (டிசம்பர் 24) நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆர்.கே. நகருக்கு மொத்தம் 4 தபால் வாக்குகள் உள்ள நிலையில் ஒரு தபால் வாக்கு மட்டுமே பதிவானது. அதில் திமுகவே வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் முதல் சுற்றில் டி.டி.வி. தினகரன் - 5,339, அதிமுக மதுசூதனன் - 2738, திமுக மருது கணேஷ் - 1181, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 258, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 66 என வாக்குகள் பெற்றனர். 

பின் இரண்டாம் சுற்று முடிவில் டி.டி.வி. தினகரன் - 10421, அதிமுக மதுசூதனன் - 4521, திமுக மருது கணேஷ் - 2324, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 459, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 117 வாக்குகள் பெற்றனர்.

மூன்றாம் சுற்று முடிவில் தினகரன் - 15,868, அதிமுக மதுசூதனன் - 7,033, திமுக மருது கணேஷ் - 3,750, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம் - 459, நோட்டா - 122, பாஜக கரு.நாகராஜன் - 117 வாக்குகள் பெற்றுள்ளனர்.

19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தற்போது நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...