ஆர்.கே.நகர்: பாஜக-வை மிஞ்சும் நோட்டா வாக்குகள்

டிசம்பர் 24

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை பெற்று வரும் நிலையில் நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளர் பின்தங்கியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு கடந்த 21ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு. நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் உள்ளிட்டு 59 வாக்காளர்கள் போட்டியிட்டனர். 

இந்தத் தேர்தலில் மொத்தம் 77.5 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 10,421 வாக்குகள் பெற்று தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அடுத்த நிலை வகித்து வருகின்றனர்.

இதனிடையே, நோட்டா-விற்கு 122 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் தேசிய கட்சியான பாஜக வேட்பாளர் 66 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தினை வகித்து வருகிறார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...