எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சி நீலகிரியில் துவக்கம்

நீலகிரி, டிசம்பர் 22

நீலகிரி மாவட்டத்தில் வருகின்ற 30ம் தேதியன்று நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது அரிய புகைப்படக்கண்காட்சி மற்றும் அதிநவீன மின்னணு திரைப்பட வாகனத்தினை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.



எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவின் முன்னேற்பாடாக மாவட்டம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, கலைத்துறை, அரசியல், சிறப்புத்திட்டங்கள் தொடங்கி வைத்தல், முக்கியத் தலைவர்களுடனான அரிய புகைப்படங்கள் என 200-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது, இன்று முதல் வருகின்ற 24ம் தேதி வரை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், விழாவினை முன்னிட்டு அருகிலுள்ள மாவட்டங்களான கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனங்களுடன், நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம், நீலகிரி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிட இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.



இவ்வாகனங்கள், தொடர்ந்து, வருகின்ற 29-ம் தேதி வரை திரைப்படங்களும், விழா நடைபெறும் நாளான டிசம்பர் 30 அன்று நீலகிரி மாவட்ட குதிரை பந்தய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் நேரலையை மாவட்டத்தின் பலபகுதிகளுக்கும் ஒளிபரப்பப்படவுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...