'கருப்பு பணம் பற்றிய போதுமான அடிப்படை அறிவு மக்கள் மத்தியில் இல்லை'

கோவை, டிசம்பர் 21

'கருப்பு பணம் பற்றிய போதுமான அடிப்படை அறிவு மக்கள் மத்தியில் இல்லை. அதனால் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வியை பற்றி கூட அறியாமல், கருப்பு பணம் ஒழிந்துவிட்டதாக நம்புகிறார்கள் என்று மாற்று வளர்ச்சி மையத்தின் நிறுவனர், திரு. ஜெ. ஜெயரஞ்சன் வருத்தப்பட்டார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில், 'பொருளாதார தி்ட்டங்களால் நாம் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா?' என்ற தலைப்பில், பொருளாதரக் கொள்கைகளின் தாக்கம் பற்றிய கருத்தரங்கம் , புதன்கிழமை மாலை நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய ஜெயரஞ்சன் கூறியதாவது:

அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தினமும் ஒரு பொய்யான புள்ளி விவரங்களை பட்டியலிட்டு அந்த தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்நிலையில், அரசு சேவைகள் அனைத்தும் தனியார்மயம் ஆக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை சென்றடையும். முதலாளித்துவ கொள்கைகள் வெளிப்படையாகவே அனைத்து துறைகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் இயற்கை வளமும், மனித வளமும் உலகை கட்டுப்படுத்தும் பெரும் பணக்கார முதலாளிகளால் சுரண்டப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநில அரசுகளும், உள்ளூர் முதலாளிகலும் செயல்படுகின்றனர்' என்று கூறினார்.



கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசிய எழுத்தாளர் பாமரன், 'கல்வியின் பெருமை அறிந்த மனிதன், மணலில் எழுதி பழகினான். பின், எழுத்துக்களை அச்சுக்களில் வடித்து வாசித்தான். ஊரில் வாசிக்கத் தெரிந்த ஒரு நபர் முச்சந்தியில் உள்ள விளக்கின் அடியில் அமர்ந்து, ஊர் மக்களுக்கு நாளிதழ்களை வாசித்துகாட்டுவார். இப்பொழுது நாம் நவீன முறைகளில் கல்வி கற்றுகொண்டிருக்கிறோம். இருந்தும், பொருளாதாரம் பற்றிய அறிவு நம்மிடம் மிகக் குறைவு. நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்குவகிக்கும் பொருளாதாரம் பற்றி அறிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்கம், தொடர்ந்து நடத்தப்படும்' என்று கூறினார்.



உலகமயமாக்கல் குறித்து உரையாற்றிய பொருளாதார வல்லுநர் செளந்தரன், 'உலகமயமாக்கலால் அதிகம் பயனடைந்தவர்கள் நடுத்தர மக்கள், ஆனால் பொருளாதாரம் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது' என எச்சரித்தார்.



மேலும் அவர் கூறியதாவது, 'அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், சீனாவிற்கு அடுத்த நிலையில் இந்தியாவை தங்களது சந்தைக்கான நாடுகளாக பார்க்கிறது. எல்லா துறைகளிலும் வெளிநாடுகளின் முதலீடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மருத்துவம் மற்றும் உயர்கல்வி சேவைகளை தனியார் வசம் கொடுப்பதால், வெளிநாட்டினரின் ஆதிக்கம் அதிகரிக்கும், எனவே பொருளாதாரமும் பொதுமக்களும் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் நிதித் துறையை ஆகிரமிக்க தொடங்கியுள்ளனர். இதுபோன்ற பெரும் ஆபத்துகளை உணராமல் பொதுமக்கள் உள்ளனர், கப்பல் பாறையை முட்டும் போதுதான் ஆபத்து புரியும்' என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற பொருளாதார நிபுனர்களும், பொதுமக்களும், பொருளாதாரம் சார்ந்த தங்களின் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...