விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது: தமிழிசை சவுந்திரராஜன்

கோவை விமானம் நிலையத்தில் தமிழிசை பேட்டி, ஆர்.கே. நகரில் பணம் பட்டுவாடாவைத் தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. தேர்தலை குறிவைத்து அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டிருப்பது தெரியாது என தினகரன் நாடகம். விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது. என்றார்.


கோவை, டிசம்பர் 21

விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது என அக்காட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

கோவை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- ஆர்.கே. நகரில் பணம் பட்டுவாடா திகைக்கும் அளவு உள்ளது. காய்கறி மூட்டைகளில் பணம் கொண்டு வரப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் பணம் விநியோகத்தைத் தடுக்க முடியவில்லை.

தேர்தலை குறிவைத்து அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது தினகரனுக்கு தெரியாது என நாடகம் ஆடுகின்றனர். ஊழல் செய்து பணம் கொள்ளையடிப்பதை தடுக்க நேர்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். 

விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது. பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தால் கெயில் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது. நெடுஞ்சாலை ஓரங்களில் இத்திட்டம் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...