பிப்.,1 முதல் கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான ரயில்சேவையில் தற்காலிக மாற்றம்

கோவை, டிசம்பர் 20

ரயில்நிலைய விரிவாக்கப்பணிகள் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான ரயில் சேவையில் பிப்ரவரி 1-ம்தேதி முதல் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைமேடைகளின் நீளத்தை 23 ரயில்பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பது தொடர்பான பணிகளுக்காக அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரையிலான 31 நாட்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ரயில்சேவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்கள் பின்வருமாறு:

ரயில் எண். 12671/12672 சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி விரைவு ரயில், கோவை - மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்பட்டு, கோவையிலேயே நிறுத்தப்படுவதுடன் அங்கிருந்தே புறப்படும்.

ரயில் எண். 56145/56146, 56147/56148, 56149/56150, 56151/56144 கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில், மேட்டுப்பாளையம் காரமடை இடையே ரத்து செய்யப்பட்டு, காரமடையில் நிறுத்தப்படுவதுடன் அங்கிருந்தே புறப்படும்.

பயணிகள் இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...