பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

கோவை, டிசம்பர் 20

கோவையில் பள்ளி மாணவிகள் இருவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் பீளமேடு அருகே உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் நேற்று திடீரென் மாயமாகினர்.

இது தொடர்பாக மயாமான பள்ளி மாணவியின் தந்தை பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவிகள் இருவரையும் தேடிவந்தனர்.

இந்த நிலையில், குன்னூரை சேர்ந்த ஆசிக் (26) என்ற வாலிபர் மாணவிகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அந்த வாலிபரின் தொலைபேசி எண்ணை வைத்து அவர் நீலகிரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். 

இதனை தொடர்ந்து, நீலகிரிக்கு சென்ற போலீசார் கூடலூரை அடுத்த தொப்பக்காடு என்ற பகுதியில் இருந்த அந்த இரண்டு மாணவிகளையும் மீட்டனர். 

விசாரணையில் ஆசிக் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், மாணவிகளை கடத்திச் சென்று விடுதி அறையில் தங்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது.

இந்த சூழலில், கடத்தப்பட்ட இரண்டு மாணவிகளையும் மீட்ட போலீசார் அவர்களது பெற்றோர்களிடம் ஓப்படைத்தனர். மேலும், அந்த வாலிபரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...