கோவை, டிசம்பர் 19
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் உயர்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாநில அரசின் சார்பாக சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்காக நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும்.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இரா. செந்தில்வேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகிகள், மகளிர் அமைப்புகள் உட்பட கிறித்துவ சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என 300-க்கம் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சிறுபான்மையினருக்கான வழிபாட்டு உரிமைகளை பாதுகாத்திடவும், புதிய பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் கட்டிட அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கரும்புக்கடை போன்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அரசு உயர்நிலைப்பள்ளி, நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கியின் கிளை, பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.