திருப்பூர், டிசம்பர் 19
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.இதில் 4 பேர் பலி , இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.
நள்ளிரவில் நடந்த கோர விபத்து குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை செய்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையம் வி எஸ்.ஏ. நகரை சேர்ந்தவர்கள் கார்த்தி மற்றும் மாணிக்கராஜ். சகோதரர்களான இவர்களில் கார்திக்கடந்த வாரம் புதிதாக மாருதி வேன் வாங்கியுள்ளனர்.
இன்று திருப்பூரில் இருந்து சகோதரர்கள் இருவர் உட்பட அதே பகுதியை சேர்ந்த 4 நண்பர்களுடன் கோவைக்கு வேனில் சென்றுவிட்டு நள்ளிரவு திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். வேன் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குப்புசாமிநாயுடுபுரத்தை அடுத்த ஜி.டி.என்.கம்பெனி அருகே வந்துகொண்டிருந்த போது எதிரே திருப்பூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேன் அப்பளம் போல் நொருங்கியது. மேலும் வேனில் பயணம் செய்த கார்த்திக், அவரது சகோதரர் மாணிக்கராஜ் உட்பட 4 பேர் உடல் நசுங்கி பலியாயினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்தும் இறந்தவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.