கோவை, டிசம்பர் 18
பொதுக்கூட்டம் நடத்தத் தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையில் விலங்குடன், வாயில் கருப்புத்துணி கட்டி வந்து தமிழ்புலிகள் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 17ம் தேதியன்று வடவள்ளி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தக் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தோம். ஆனால், அந்த மனு மறுக்கப்பட்டது. மேலும், கடந்த நவம்பர் 17ம் தேதியன்று செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளை முன்னிட்டு உக்கடம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டபோதும் காவல்துறையினர் அனுமதி தர மறுத்துவிட்டனர். இதுபோன்றே, ஒவ்வொரு முறையும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் இதுபோன்ற நடவடிக்கை பேச்சுரிமையை ஒடுக்கும் நடைமுறை ஆகும்.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நாங்கள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.