குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்- தொல். திருமாவளவன்

கோவை, டிசம்பர் 17

குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தால் ஒக்கி புயலால் உயிரிழந்த ஒவ்வொரு நபருக்கும் 50 லட்சம் ரூபாயும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும். இந்துக்கள் கோவில் இடிப்பு குறித்த என் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு அரசியல் காரணங்களுக்காகவும், காழ்ப்புணர்ச்சி அடிப்படையிலும் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செயல்படுவது வேதனை அளிக்கிறது.

மோடிக்கு நேரடியாகக் களம் காணும் சவால் காங்கிரஸ் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு உள்ளது. மதவாத சக்தியிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் மிகப்பெரிய சவாலை அவர் சிறப்பாக செய்வார். 

விவசாயிகளின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டுமே தவிர ஆளுங்கட்சி என்று கண்ணை மூடிக்கொண்டு எந்தத் திட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கக்கூடாது. கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாகச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வெற்றிபெற வாய்ப்புள்ளது. வெற்றிபெற வாய்ப்பில்லாதவர்கள் தேர்தலை நிறுத்த சதி செய்து வருகின்றனர். ஆர்.கே.நகரில் காவல்துறையும், தேர்தல் ஆணையமும் வழக்கம் போல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதுடன், பணியில் உள்ள துணை ராணுவம் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்ட விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு பணப் பட்டுவாடவை தடுக்கத் தவறிவருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...