கெயில் திட்டம் : 7 பேர் கொண்ட பாஜக குழுவிற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

கோவை, டிசம்பர் 16

தமிழகத்தில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட பாஜக குழுவை கலைக்குமாறு கொங்கு மண்டல விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 7 கொங்கு மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழக பாஜகவால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலையும், அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர். 



இக்கூட்டத்தில், கெயில் நிறுவனத்திற்கு இடையூறற்ற பயன்பாட்டாளர் என்ற அங்கீகாரத்தை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்துவதைக் கண்டித்தும், கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை சுமூகமாக நிறைவேற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட உயர்நிலை தொழில்நுட்பக் குழுவில், பாதிக்கப்பட்ட  விவசாயிகளையும் உறுப்பினராகச் சேர்த்து களஆய்வு மேற்கொண்டு திட்டத்தை செயல்படுத்தப் பிரதமர் உத்தரவிடக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், கெயில் எரிவாயு குழாய் திட்டம் போன்று, பெட்ரோலிய நிறுவனங்கள் மேலும் பலகுழாய்களை பதிக்கும் திட்டங்களை இதேபகுதியில் விளைநிலங்களின் வழியாகச் செயல்படுத்த தயாராவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வாக, குஜராத் மற்றும் வளர்ந்த நாடுகளைப் போன்று பட்டா நிலங்களை மத்திய, மாநில அரசுகள் விலைக்கு வாங்கி அரசு நிலமாக மாற்றியமைத்து, அதன் வழியாக எரிவாயு குழாய்களையும், மின்சார உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் போன்ற அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளலாம் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய பெட்ரோலியம் மினரல்ஸ் பைப்லைன் திட்டம் 1962-ல் உள்ள பயனாளியின் உரிமை (right of user)  என்ற பிரிவையும், உயர்மின் கோபுரங்கள் அமைத்திட 1882 ஆம் ஆண்டு டெலகிராபிக் சட்டத்தில் உள்ள சரியான வழி (right of way) என்ற பிரிவையும் அறவே நீக்கிடவும், கெயில் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாகச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...