டிசம்பர் 16
சேலம் உருக்கு ஆலையைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சேலம் உருக்கு ஆலையைத் தனியார் மயமாக்கக் கூடாது. சர்வதேச அளவில் டெண்டர் கோரப்படும் முயற்சியைக் கைவிட வேண்டும். சேலம் உருக்கு ஆலை தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலையாக திகழ்கிறது. தனியார் மயமாவதால், 2 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தமிழக அரசு உதவியுடன் ரூ.2,005 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணி முடிவடைய உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.