கோவை, டிசம்பர் 15
கோவையில் குண்டும் குழியுமான சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, நிலைதடுமாறியதில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட ரத்தனபுரி அருகே உள்ள சங்கனூர் - மேட்டுப்பாளையம் சாலையினை மேம்படுத்தாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், சங்கனூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது, எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாலிபர் தலை நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி ஒட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர் விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சாலைகளைச் சரிவர பராமரிப்பு செய்யாததால் வாகனப் போக்குவரத்து மிகுந்த புறவழி சாலையான இப்பகுதியில் தொடர் விபத்து ஏற்படுகிறது. அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், உயிர்பலி அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதால் தற்போது போராட்டம் நடக்கிறது. இவ்வாறு கூறினர்.