கோவையில் வரும் 17-ம் தேதி தேசிய அளவிலான கார்பந்தயம் - ரசிகர்கள் ஆவல்


கோவை, டிசம்பர் 15

18-வது எம்.கே.சுந்தர் நினைவு தேசிய அளவிலான கார்பந்தயம் வரும் 17ம் தேதி கோவையில் நடக்கிறது. இந்தப் போட்டியைக் காண மாவட்டத்தில் உள்ள கார்பந்தய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், பெடரேசன் ஆப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கான்பிடரேசன் ஆப் இந்தியா மற்றும் கோயமுத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து 17-வது ஆண்டாக இந்தக் கார் மற்றும் இருசக்கர பந்தயத்தை நடத்தப்படுகிறது. மோட்டார் பந்தய ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. கார் மற்றும் இருசக்கர வாகனப் போட்டிகளில் அனுபவம் உள்ளவர், புதிதாகப் போட்டியில் பங்கேற்பவர்கள் மற்றும் முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் போட்டி என 3 வகையாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. 

மேலும், ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இப்போட்டிகள் திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் துவங்கி போகம்பட்டி, சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, காட்டம்பட்டி, செட்டிபாளையம் வழியாகத் துவங்கிய இடத்திலேயே முடிவடைகிறது. இதன்மொத்த தூரமான 120 கி.மீட்டரை குறைந்த பெனால்டி புள்ளிகளுடன் நிறைவு செய்பவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படும். மேலும், 4 சக்கர வாகன போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000 மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ. 7,000 மற்றும் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ. 4,000 மற்றும் கோப்பையும், நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடிப்பவர்களுக்கு கோப்பைகள் மட்டும் வழங்கப்படுகிறது.

பெண்கள் பிரிவில் புதிதாகப் போட்டியில் பங்கேற்பவர்கள் பிரிவில், முதல் பரிசாக ரூ. 5,000 மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ. 3,000 மற்றும் கோப்பையும், மூன்றாம் இடத்திற்குக் கோப்பையும் வழங்கப்படுகிறது. பெண்கள் பங்கேற்கும் பிரிவில் முதலிரண்டு இடங்களுக்குக் கோப்பைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இரு சக்கர வாகன போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 6,000 மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ. 4,000 மற்றும் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ. 2,000 மற்றும் கோப்பையும் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்திற்குக் கோப்பைகள் மட்டும் வழங்கப்படுகிறது.

புதிதாகப் போட்டியில் பங்கேற்கும் ஆண்கள் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000 மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.2,000 மற்றும் கோப்பையும், மூன்றாவது பரிசாக கோப்பை மட்டும் வழங்கப்படும். இதன் பரிசளிப்பு விழா அன்று மாலையே நடைபெறுகிறது. இதில், மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க உள்ளார். இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் சனிக்கிழமை மாலை 7 மணி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...