கோவை, டிசம்பர் 15
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஒருமையில் பேசிய பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜாவைக் கண்டித்து கோவையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஹெச். ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
காந்திபுரம், திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது, தமிழகத்தை விட்டே காவி கும்பலை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறினர். மேலும், தரக்குறைவாகப் பேசிய ஹெச். ராஜாவிற்குக் கண்டனம் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அவரை திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தின் நடுவே, ஹெச். ராஜாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர், உருவபொம்மையை போலீஸார் பிடுங்கிச் சென்றனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒரு பெண் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.