கோவை, டிசம்பர் 14
உணவுப் பொருட்கள் மற்றும் அது சார்ந்த தொழில்முனைவோருக்கான பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் அனுமதியுடன் ”தி வென்ட்ச்யூர் ஹாலிஸ்” சார்பில் நடத்தப்படும் இந்த வகுப்பானது, சத்தியமங்கலம் சாலையில் உள்ள கணபதி பகுதியில் நடத்தப்படுகிறது. இதில், அடிப்படை, மேம்பட்ட, சிறப்பான என 3 பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பயிற்சி வகுப்புகளுக்கான நேரம் மற்றும் கால அளவு மாறுபடும். இந்த வகுப்பில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு எஃப்ஓஎஸ்டிஎசி (FoSTAC) சான்றிதழ் வழங்கப்படும்.
இதில், பயிற்சி பெறத் தகுதியானவர்கள் உணவு சம்பந்தமான படிப்புகளைப் படித்திருத்தல் அவசியம். ஒரு வகுப்பில் 40 முதல் 50 மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ.2,500. சலுகைப் பெறும் மாணவர்களுக்கு ரூ.2,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.