போக்குவரத்து நிர்வாகத்தினைக் கண்டித்து உக்கடம் பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டம்


கோவை, டிசம்பர் 14

பேருந்துகளில் வசூலான கட்டண பணத்தை வாங்க போக்குவரத்து நிர்வாகம் காலம் கடத்துவதாகக் கூறி பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

கோவை, உக்கடம் இரண்டாவது போக்குவரத்து பணிமனையில், நேற்று மாலை பணி முடித்து திரும்பிய அரசு பேருந்துகளில் வசூலான கட்டணப் பணத்தை செலுத்த பேருந்து ஊழியர்கள் சென்றபோது அதனை வாங்காமல் நிர்வாகம் காலம் கடத்தியுள்ளது. தொடர்ந்து, இன்று காலை வரை வசூலான பணத்தை பெற்றுக் கொள்ளாமல் நிர்வாகம் காக்க வைத்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிர்வாகம் சார்பில் அந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், இன்று நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்பதை தடுக்கும் விதமாகவே வசூலான பணத்தை பெறாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இன்று நடத்தப்படும் காத்திருப்புப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க உள்ளோம் என்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...