கண்மாயில் விழுந்த குட்டியானை : பாசப் போராட்டத்தால் வாகன ஓட்டிகளை விரட்டிய தாய் யானை


டிசம்பர் 12

மேட்டுப்பாளையம் அருகே குட்டியானை கண்மாயில் விழுந்ததால், பரிதவித்த பெண்யானை சாலைகளில் சென்ற வாகனங்களைத் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சுண்டப்பட்டி பிரிவு வனபத்திரகாளியம்மன் கோவிலை அடுத்து தேக்கம்பட்டி சாலையோரம், பம்ப் ஹவுஸ் அருகில் ஒரு பெண் யானை சாலையில் செல்பவர்களை விரட்டியது. மேலும், வாகனங்களையும் சேதப்படுத்தியது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் யானையை அருகில் உள்ள நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்டினர். 



 

இருப்பினும், மீண்டும், மீண்டும் சாலைப்பகுதிக்கே யானை வந்ததால், வனத்துறையினர் சந்தேகமடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மாதம் மதிக்கத்தக்க யானைக்குட்டி பழைய வாய்க்காலுக்குள் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்காரணமாகவே, யானை ஒரே பகுதியில் திரிந்ததுடன், சாலையில் செல்பவர்களை துரத்தியது தெரியவந்தது. 

இதையடுத்து, உடனடியாக குட்டி யானையை மீட்டு இளநீர், குளுக்கோஸ் போன்ற ஊக்க பானங்களைக் கொடுத்து, நெல்லிமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது. 

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...